சட்ட அறிஞர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் கையெழுத்து.

சட்ட அறிஞர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகியவற்றில் நிலுவையில்  உள்ள வழக்குகளைத் தீர்த்து  வைப்பதற்கென இந்த உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சட்ட அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத், இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் நீதிபதி டேவிட் காக்கே ஆகியோர் லண்டனில் கையெழுத்திட்டனர்.

சட்ட விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இருநாடுகளிலும் உள்ள நீதித்துறை மற்றும் சட்டத்துறை நிபுணர்களிடையே மேலும் சிறந்த ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், இந்த ஒப்பந்தம் உதவுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை சென்ற வாரம் ஒப்புதல் அளித்தது.

 

Pin It