சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டம்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை மறுநாள் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இடங்களில் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் பாஜக வும், எதிர்கட்சியான காங்கிரஸும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஜகதால்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோதி, மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்கு 24 மணிநேரமும் தமது அரசு செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

கேன்கர் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் திரு ராகுல்காந்தி, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்தார்.

Pin It