சந்தல் தீவிரவாத வழக்கில்  நைரெம் பிரேம்கந்த் சிங் கைது

சந்தல் தீவிரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான நைரெம் பிரேம்கந்த் சிங்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  2015ம் ஆண்டு மணிப்பூரில் சந்தல் மாவட்டத்தில்  ராணுவ  வீரர்கள் மீது பதுங்கி இருந்த  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இந்தத்  தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதனையடுத்து இச்சம்பவத்தில ஈடுபட்ட  தீவிரவாத இயக்கமான கங்லை யாவல் கன்னா லுப் இயக்கம் தடை செய்யப்பட்டது.  இந்த வழக்கில தொடர்புடைய  பிரேம் கந்த் சிங்கைக்  காவல்துறையினருடனான கூட்டு வேட்டையின்போது தேசியப்  புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.

Pin It