சந்திரனை ஆய்வு செய்ய சந்திராயன் – 2  – ஜனவரி 3 ஆம்  தேதி விண்ணில்  செலுத்தத் திட்டம்.

சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்படும் சந்திராயன் – 2ஐ வரும் ஜனவரி 3 ஆம்  தேதி விண்ணில்  செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் தலைவர் திரு கே சிவன் கூறியுள்ளார். பெங்களுருவில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச்  மாதம்  வரை அது தள்ளிப் போக  வாய்ப்பு இருப்பதாகவும்  அவர் தெரிவித்தார். 800 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் சந்திராயன் – 2 திட்டம், சந்திராயன் – 1 திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், பத்து ஆண்டுகள் கழித்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

Pin It