சந்திரயான்-2 திட்டம் தனித்தன்மை கொண்டது – இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவன்.

இந்தியாவின் சந்திரயான்-2 திட்டம் தனித்தன்மை கொண்டது என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவன் தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலிக்கு சிறப்புப் பேட்டியளித்த அவர், இதுவரை, உலகின் வேறு எந்த நாட்டு விண்கலமும் நிலவின் தென்துருவப் பகுதிக்கு செல்லவில்லை எனவும், இந்தியாவின் இந்த விண்கலம் மட்டுமே அப்பகுதியில் இறங்கவிருப்பதாகவும்  அவர் கூறியுள்ளார். இந்த விண்கலத்தை வரும் ஜனவரி மாதம், 3 ஆம் தேதி செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மனிதர்களை ஏற்றிச் செல்லும் ககன்யான் விண்கலத் திட்டத்திற்கான செயல்பாட்டுத் தொழில்நுட்பம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மனிதர்களுடன் விண்கலம் செலுத்தப்படுவதற்கு முன், மனிதர்கள் இல்லாத இரண்டு விண்கலங்கள் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Pin It