சர்வதேச நாடுகள் வெப்ப உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் – ஐநா வலியுறுத்தல்.

சர்வதேச நாடுகள் வெப்ப உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஐநா வலியுறுத்தி உள்ளது. போலந்தில் நடைபெற்றுவரும் ஐநாவின் பருவநிலை மாறுபாடு குறித்த மாநாட்டில் ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த 7 விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். சர்வதேச நாடுகள் 2030 ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாறுபாட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தினர். 2030 ஆம் ஆண்டு உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, வெப்ப உமிழ்வைத் தடுப்பதை முக்கியப் பணியாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

 

Pin It