சவூதி அரேபியாவில் தீவிரவாதக் குற்றவாளிகள் பெருவாரியாக தலைசீவி தண்டிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது – ஐ.நா. மனித உரிமைக் கழகத் தலைவர்.

தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட, சிறார்கள் உட்பட, 37 பேரின் தலைகள் சீவப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியளிப்பதாகவும், முறை தவறிய செயலாகவும் உள்ளதாக, ஐ.நா. மனித உரிமைக் கழகத் தலைவர் மிஷெல் பேச்லெட் அவர்கள் தெரிவித்துள்ளார். மனித உரிமை அதிகாரிகள், நடைமுறைகள் செயல்படுத்தப்படவில்லை என பலமுறை எச்சரித்தும், செவ்வாயன்று, 6 நகரங்களில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஐ.நா. மனித உரிமைக் கழக அலுவலகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத்த்திற்கு எதிரான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், எக்காரணத்தைக் கொண்டும் சிறார்கள் கொல்லப்படக்கூடாது என்றும், தண்டனை அளிக்கப்படவுள்ள நபர்களைத் தண்டிப்பது நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் சவூதி அரேபியாவை  ஐ.நா. மனித உரிமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Pin It