சிக்கிம் மாநில முன்னாள் முதலமைச்சர் நார்பஹதூர் பண்டாரி காலமானார்.

நேற்று, புது தில்லியில், சிக்கிம் மாநில முன்னாள் முதலமைச்சர் நார்பஹதூர் பண்டாரி காலமானார். அவருக்கு வயது 76. 1979 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பதவி வகித்த திரு. பண்டாரி அவர்கள், சிக்கிம் சங்ராம் பரிஷத்தின் நிறுவனத் தலைவர் ஆவார். சிக்கிம் மண்ணின் மைந்தர் திரு பண்டாரி அவர்கள் என்று குறிப்பிட்ட சிக்கிம் முதல்வர் திரு. பவன் சாம்லிங் அவர்கள், தனது இரங்கல் செய்தியில், ஒரு மாபெரும் தலைவரை சிக்கிம் இழந்து விட்டது என்று குறிப்பிட்டார். அன்னாரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், பண்டாரி அவர்களை, மக்களின் தலைவர் என்றும் நடைமுறைகளுக்கு ஒப்பப் பணியாற்றிய அரிய தலைவர் என்றும் குறிப்பிட்டார்.

Pin It