சிந்து நதி நீர்  நிரந்தர ஆணையத்தின் இரண்டு நாள் மாநாடு இன்று இஸ்லாமாபாதில் தொடங்குகிறது.

 

இஸ்லாமாபாதில் இன்று தொடங்கவிருக்கும் சிந்து நதி நீர் தொடர்பான நிரந்தர ஆணையத்தின் இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்ள பத்து உறுப்பினர்  கொண்ட இந்திய பிரதிநிதிக் குழு நேற்று பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றது.  இந்தியாவின் சிந்து நதி நீர் ஆணையர் பி.கே. சக்சேனா தலைமையிலான குழுவில், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், நுட்ப நிபுணர்கள் ஆகியோர் அடங்குவர்.  பாகிஸ்தானை அடித்தளமாகக் கொண்ட அமைப்புகள் நடத்திய ஊரி  பயங்கரவாதத்  தாக்குதலுக்குப் பிறகு, இந்த உடன்படிக்கை குறித்த பேச்சு வார்த்தைகளை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்தக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  சிந்து நதி நீர் உடன்படிக்கையின் கீழ், பாகிஸ்தானுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து இருதரப்பு ரீதியில் விவாதித்து தீர்வு காண இந்தியா எப்போதுமே ஆயத்தமாக இருக்கிறது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  ஆனால், 57 ஆண்டுகால உடன்படிக்கையின் கீழ் தனது உரிமைகளை இந்தியா பயன்படுத்திக்  கொள்வதில் எந்த சமரசமும் இருக்காது.

Pin It