சிபிஐ இயக்குநர் பொறுப்பிலிருந்து திரு அலோக் வர்மா மாற்றம்.

சிபிஐ இயக்குநர் பொறுப்பிலிருந்து திரு அலோக் வர்மா மாற்றப்பட்டு தீயணைப்புத்துறை, குடிநீர் பாதுகாப்புப் பணி மற்றும் ஊர்க்காவல்படை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோதி தலைமையிலான தேர்வுக்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

பிரதமர் திரு நரேந்திர மோதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு மல்லிகார்ஜூன கார்கே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சார்பில் பங்கேற்ற திரு ஏ கே சிக்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. திரு மல்லிகார்ஜூன கார்கே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதும், பெரும்பான்மை முடிவு அடிப்படையில் திரு அலோக் வர்மாவை மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது சிபிஐ-யின் கூடுதல் இயக்குநராக உள்ள திரு நாகேஸ்வரராவ், இயக்குநர் பொறுப்புகளைக் கவனிப்பார் என்றும் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

Pin It