சிரியாவில் கிளர்ச்சிக் குழுவினர் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 11 பேர் உயிரிழப்பு.

சிரியாவில் கிளர்ச்சிக் குழுவினர் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 11 பேர் உயிரிழந்தனர். அலப்போ நகருக்கு அருகே அல் நையில் மற்றும் அல் கலியேஹ் பகுதிகளைக் குறிவைத்து போராளிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் பலர் காயமடைந்ததாகவும், அரசு செய்தி நிறுவனம் சனா கூறியுள்ளது. கிளர்ச்சிக்குழுவினர் வசமிருந்த அலப்போ நகர், 2016 ஆம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு  வரப்பட்டது. எனினும், தொடர்ச்சியாக அந்த நகரின் மீது தீவிரவாதிகளும், கிளர்ச்சிக்  குழுவினரும் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

Pin It