சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரியில் சலுகைகள் – மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரியில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி கூறியிருக்கிறார். புதுதில்லியில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு பெறுவதற்கான வரம்பு 20 லட்சம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நாட்டின் இதர பகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்த விகிதம் 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். ஒன்றுக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் திட்டத்தின் கீழ், சிறு வியாபாரிகள் பயன்பெறுவதற்கு ஏதுவாக, அரசு நடைமுறைகளை எளிமையாக்கி இருப்பதாக அவர் கூறினார். கேரளாவிற்கு வர்த்தகம் செய்வதற்கு ஒரு சதவீத மேல் வரி செலுத்த வேண்டும் என்றும், இயற்கை சீற்றத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுவதற்காக இந்த நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் திரு அருண்  ஜேட்லி குறிப்பிட்டார்.

Pin It