சீனாவின் கூவே மற்றும் ஸிட்டி ஆகிய நிறுவனங்களில் தொலைத்தொடர்புப் பொருட்களுக்கு தடை விதிக்க ஜப்பான் அரசு உத்தேசம்.

சீனாவின் கூவே மற்றும் ஸிட்டி ஆகிய நிறுவனங்களில் தொலைத்தொடர்புப் பொருட்களுக்கு தடை விதிக்க ஜப்பான் அரசு ஆலோசித்து வருகிறது. வரும் திங்கட்கிழமை இது தொடர்பாக அரசு விதிகளில் மாற்றம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்களின் பொருட்களுக்குத் தடை விதிக்குமாறு அமெரிக்கா, தனது நட்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டதை அடுத்து, ஜப்பான் இந்த முடிவை எடுக்கவுள்ளது. சீனாவின் கூவே மற்றும் ஸிட்டி நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களில் வைரஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணைய தகவல்களைத் திருடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து, அரசு நிறுவனங்களில் இந்தப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

Pin It