சீனாவில் சர்வதேச பொருளாதார வழித்தடம் தொடர்பான 2 ஆவது கூட்டம் இன்று தொடக்கம் – இந்தியா பங்கேற்கவில்லை.

சர்வதேச பொருளாதார வழித்தடம் தொடர்பான 2 ஆவது கூட்டத்தை இந்தியாவின் பங்கேற்பின்றி சீனா இன்று முதல் நடத்துகிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட 37 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த 3 நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு வாங் ஈ தெரிவித்துள்ளார். இந்த வழித்தடம் தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சாலை மற்றும் கடல் வழியாக இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

சீனா – பாகிஸ்தான் இடையே அமைக்கப்படும் பொருளாதார வழித்தடம், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அமைக்கப்படுவதால், இந்தியா இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்து வருகிறது.

Pin It