சீனாவைத் தாக்கும் டாலிங் புயல் – இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம் .

சீனாவின் ஃபியூஜியான், ஜெஜியாங் மாகாணங்களில் டாலிங் புயல் தாக்குதல் காரணமாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.   இந்தப் புயல், சீனாவின் தென்கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று மாகாண வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.  டாலிங் புயல் மேலும் வலுவடைந்து பலத்த புயலாக மாறி மணிக்கு 180 முதல் 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை அடுத்த இரண்டு நாட்களில் அடையும் என்று அந்தத் துறை தெரிவித்துள்ளது.  இந்தப் புயல் வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்றும், இன்று இரவு அல்லது நாளை காலை ஜெஜியாங் நகரைச் சென்றடையும் என்றும் அது தெரிவிக்கிறது.                 அல்லது இந்தப் புயல் வடக்கே நகர்ந்து நாளை ஜெஜியாங் அருகே கடலைக் கடந்து வடகிழக்கை நோக்கி திரும்பக்கூடும் என்றும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

Pin It