சுமத்ரா தீவுகளில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 27 பேர் உயிரிழப்பு.

வடக்கு சுமத்ரா மாகாணத்தில், நடால் மாவட்டத்தில், நேற்று பிற்பகல், திடீர் வெள்ளத்தின் காரணத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவினால், 29 பள்ளிக்குழந்தைகள் அடித்துச்செல்லப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தலைவர் இர்சான் சினுஹாஜி ஜகார்தாவில் தெரிவித்தார். சில மணி நேரத்திற்குப்பிறகு 11 குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. கிராமத்து மக்கள் 17 குழந்தைகளை மீட்டனர். பள்ளிக்கூடத்திற்கு அருகே ஆயிக் சலாடி நதிக்கரையோரத்திலிருந்து ஒரு குழந்தையின் சடலத்தை பல ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து மீட்டதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Pin It