செய்திச் சுருக்கம் 11.7.20

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்  துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரவேற்பு –  பிரதமர்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அந்நிய முதலீட்டை வரவேற்ற  பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இந்தியா,  தூய்மையான எரிசக்திக்கான  மிகவும் கவர்ச்சிகரமான சந்தை என்று விவரித்தார். சுயசார்புள்ள பாரதத்திற்கு  சூரிய ஆற்றல் மிகப் பெரிய பங்களிப்பை அளிக்க முடியும்  என்றும், இது அரசாங்கத்தின் முக்கிய கவனமாக உள்ளது என்றும் அவர் கூறினார். ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் திட்டத்தை மத்திய பிரதேசத்தின் ரேவாவில் பிரதமர் நேற்று காணொளி காட்சி  மூலம் திறந்து வைத்தார்.

இந்த திட்டத்தின்  மூலம் மத்திய பிரதேசம் இந்தியாவில் தூய்மையான எரிசக்தி மையமாக மாறும் என்று எதிர்பார்ப்பதாக திரு மோதி அவர்கள் கூறினார். மாநிலத்தில் தற்போது நீமுச், ஷாஜாப்பூர், சத்தர்பூர் மற்றும் ஓம்கரேஷ்வர் ஆகிய இடங்களில் சூரிய ஆற்றல் திட்டங்கள் உள்ளன.

 

எல்லை விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண இந்தியா, சீனா ஒப்புதல்.

இந்திய- சீன எல்லைப் பிரச்சனையை விரைவாகத் தீர்க்க, வெள்ளிக்கிழமை நடந்த, இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்பாட்டு நெறிமுறையின் பதினாறாவது கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்காக, ராஜதந்திர மற்றும் இராணுவ மட்டத்தில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

 

ஜூன் 17 ஆம் தேதி இரு வெளியுறவு அமைச்சர்களுக்கிடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தையும், ஜூலை 5 ஆம் தேதி தொலைபேசி உரையாடலின் போது இரண்டு சிறப்பு பிரதிநிதிகள் இடையேயான ஒப்பந்தத்தையும் இரு தரப்பினரும் நினைவு கூர்ந்தனர்.

இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின்படி எல்லைப் பகுதிகளில்  அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதற்காக  எல்.ஏ.சி  மற்றும் இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளிலிருந்து துருப்புக்களை விலக்கிக்கொள்ளவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

ஜூலை 26 மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் உரை.

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இந்த மாதம் 26 ஆம் தேதி அகில இந்திய வானொலியில் தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். இது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியின் 67 வது அத்தியாயமாக இருக்கும். மக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய 1800-11-7800 ஐ டயல் செய்யலாம் அல்லது  நமோ செயலியின் மூலமோ  அல்லது MyGov தளத்தின் மூலமோ  தொடர்பு கொள்ளலாம்.

COVID-19 இறப்பு விகிதம் நாட்டில் 2.72% ஆக குறைகிறது

இந்தியாவின் கோவிட் -19 இறப்பு விகிதம் 2.72 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது உலகின் பல நாடுகளில் காணப்பட்ட இறப்பு விகிதங்களை விட குறைவாக உள்ளது.  நாட்டில் கோவிட் -19 தொற்று நோயைக் கையாள்வதில் முக்கிய கவனம் இறப்புகளை குறைவாக வைத்திருப்பதாகும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இது ஒரு மா தத்திற்கு முன்பு 2.82 சதவீதமாக இருந்தது.

30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மணிப்பூர், நாகாலாந்து, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் தியு, மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சிக்கிம் ஆகிய இடங்களில் இறப்பு விகிதம் பூஜ்ஜியமாக உள்ளன.

மீட்பு விகிதம் 62.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்  மீட்பு விகிதங்கள் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளன.

இந்திய,  அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள்  மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்  திரு மார்க் எஸ்பர்  ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை நேற்று ஆய்வு செய்தனர். திரு. சிங்   அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன்  தொலைபேசி உரையாடலின் போது பரஸ்பர  பிரச்சினைகள் பற்றி விவாதித்தார்.

இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். மார்க் எஸ்பரின் வேண்டுகோளின் பேரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உரையாடல், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த பரஸ்பர பரிமாற்றத்தின் தொடர்ச்சியாக இருந்தது.

கோவிட் -19 நெருக்கடியை எதிர்கொள்வதில் இந்தியாவின் ‘நிலையான’ வாழ்க்கை முறைக்கு  இளவரசர் சார்லஸ் பாராட்டு

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இடையில் இந்தியாவின் ‘நிலையான’ வாழ்க்கை முறையை பிரிட்டனின் இளவரசர் சார்லஸ் பாராட்டியுள்ளார், நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் மீண்டெழும் ஆற்றல் தனக்குத் தனிப்பட்ட முறையில் உத்வேகம் அளிப்பதுடன் இதில் அனைவரும் கற்பதற்கான பாடமும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

காணொளிக்  காட்சி மூலம் இந்திய உலக வாரம் 2020 இல் உரையாற்றிய அவர், இந்தியாவின் தத்துவங்களும் மதிப்புகளும் ஒரு நிலையான வாழ்க்கை முறையும் மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கமான உறவை வலியுறுத்தியுள்ளன என்றார். பிரதமர் நரேந்திர மோதி அவர்களுடன் “நிலையான வாழ்வின்” முக்கியத்துவம் குறித்து பேசியதாகவும் இளவரசர் சார்லஸ் கூறினார்.

‘அபரிகிரஹா’ என்ற பண்டைய யோகக் கருத்தைப் பற்றிப் பேசிய வேல்ஸ் இளவரசர், இந்த தொற்றுநோயிலிருந்து மீண்டெழ உலகமே முற்படும் நிலையில், இந்த பழமையான   ஞானத்தை உலகம் இந்தியாவில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்றார்.

இலங்கை: மறுவாழ்வு மையத்தில் 87 பேருக்கு  COVID19  பாதிப்பு உறுதி.

இலங்கையில், ஒரு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் மேலும் 87 பேர் கோவிட் நோயாளிகளாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, கண்டகாடு மையத்தில் 196 கைதிகள் மற்றும் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காலை நோய் கண்டறியப்பட்ட நிலையில், 56 கைதிகள் மற்றும் ஒரு ஆலோசகருக்கும் கோவிட் தாக்கியுள்ளதன் மூலம், நாட்டில் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு சமூகத் தொற்றுப்   பரவல் மீண்டும் தலையெடுத்துள்ளது.

நேற்று ஒரு நாளில் 296 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், இந்தியாவில் இருந்து ஒன்பது பேரும், பாகிஸ்தானில் இருந்து  வந்த ஒருவரும் அடங்குவர்.

 

 

ஈரானியர்  மீதான அமெரிக்காவின்  ட்ரோன் தாக்குதல் குறித்த ஐ.நா. அறிக்கைக்கு  பாம்பியோ கண்டனம்

ஜனவரி மாதம் ஒரு உயர் ஈரானிய ஜெனரலைக் கொன்ற ஒரு அமெரிக்க ட்ரோன் தாக்குதல்,  ட்ரோன் உபயோகத்தில் வெட்கக்கேடான சம்பவம் என்றும் அது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் வலியுறுத்திய ஒரு  ஐ.நா மனித உரிமை நிபுணரின் அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ விமர்சித்துள்ளார்.

ஐ.நா. ஆதரவு மனித உரிமைகள் பேரவையில் ஆக்னஸ் காலமார்ட் வியாழக்கிழமை வழங்கிய அறிக்கை ஈரானிய ஜெனரல் காஸ்ஸெம் சோலைமானியின் மரணம் மற்றும்அதன் சட்ட ரீதியான தாக்கங்களை,   ட்ரோன் தாக்குதல்களைப் பயன்படுத்துவது குறித்த விரிவான பார்வையின் ஒரு பகுதியாக அவர்   விவரித்தார்.

 

தனது COVID-19 தொற்றுநோய் மேலாண்மையை மதிப்பாய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு ஒரு சுயாதீனமான குழுவை அமைத்தது.

COVID-19 தொற்றுநோயைக் கையாளுதல் மற்றும் அரசாங்கங்களின் எதிர்வினைகள் இவற்றை மறுஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு சுயாதீன குழுவை அமைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு  சீனா சார்புடையதாகச் செயல்படுவதாகக்  குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் மற்றும் லைபீரிய முன்னாள் அதிபர் எலன் ஜான்சன் சிர்லீஃப் ஆகியோர் குழுவிற்கு தலைமை தாங்க ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்கள்  மற்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தக் குழு, நவம்பர் மாதம்  நடைபெறவுள்ள சுகாதார அமைச்சர்களின் வருடாந்தரக் கூட்டத்தில், தனது   இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.  மே மாதம் ஒரு முக்கிய அறிக்கையை முன்வைக்கும்.

 

நோட்ரே டேம் கதீட்ரல் நவீன மாற்றங்கள் இன்று  முன்பு போல மீண்டும் கட்டப்படும்.

நோட்ரே டேம் கதீட்ரல் கடந்த ஆண்டு பேரழிவு ஏற்படுத்திய தீவிபத்துக்கு முன்பிருந்தது போலவே  மீண்டும் கட்டப்படும்.

இடைக்கால பாரிஸ் நினைவுச்சின்னத்தின் கூரையில் நீச்சல் குளம் , இயற்கைத் தாவரத் தோட்டம்,  பிற நவீன மாற்றங்கள் எதுவும் இல்லாமல்,  பழையபடியே உருவாக்கப்படும். வரலாற்று ரீதியாக துல்லியமாக இருக்க, இது மீண்டும் நச்சு ஈயத்துடன் கட்டப்படும்.

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கதீட்ரலின் இன்றைய கட்டிடக் கலைஞர்கள் மற்றும் புனரமைப்புத் திட்டத்தின் பொறுப்பாளர் ஆகியோர் விவாதித்து இந்த தீர்ப்பை எட்டியுள்ளனர்.

நோட்ரே டேம் 2024 ஒலிம்பிக் நேரத்தில் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று விரும்பும் மக்ரோன், முதலில் இந்தப் புனரமைப்பு நவீன திட்டங்களுடன் நடக்க வேண்டும் என்று விரும்பினார்.

டஸ்கனியில் முதல் எஃப் 1 பந்தயம்.  ரஷ்ய ஜி.பி. ரசிகர்களுடனான முதல் பந்தயமாக இருக்கும்

முகெல்லோவில் முதல் டஸ்கன் கிராண்ட் ப்ரீ செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஸோச்சியில் ரஷ்ய கிராண்ட் ப்ரீ இந்த பருவத்தில் ரசிகர்களுடனான  முதல் ஃபார்முலா ஒன் பந்தயமாக இருக்கலாம்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஸ்பீல்பெர்க்கில் உள்ள ரெட் புல் ரிங்கில் ரசிகர்கள் இல்லாத எஃப் 1 சீசன் கடந்த வார இறுதியில் ஆஸ்திரியாவில் தொடங்கியது. ஆனால் ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி செர்னிஷென்கோ இந்த ஆண்டு இறுதியில் ஸோச்சியில் நடைபெறும் பந்தயத்தில் பார்வையாளர்கள் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

ஃபார்முலா 1 அணிகள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்க, ரஷ்யா தயாராக உள்ளது. போட்டியின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தின் போது தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும், என்று செர்னிஷென்கோ வெள்ளிக்கிழமை கூறினார்.  இது ரஷ்ய விளையாட்டுக்கு ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும்.

 

 

Pin It