செய்திச் சுருக்கம் 16.10.20

இந்தியா மியான்மார் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் நீர்மூழ்கி கப்பல் மியான்மாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா மியான்மார் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் நீர்மூழ்கி கப்பல் ஐ என் எஸ் சிந்துவிர் மியான்மாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் செய்தியாளர்களை சந்தித்த  வெளியுறவு செய்தித் தொடர்பாளர் திரு. அனுராக் ஸ்ரீவத்சவா இதனைத் தெரிவித்துள்ளார். கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு மியான்மாருடன் பாதுகாப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் இந்தியாவின் நிலை உயர்ந்து வருவதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரான் மால்கா கூறியுள்ளார

சர்வதேச அளவில் இந்தியாவின் நிலை உயர்ந்து வருவதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரான் மால்கா கூறியுள்ளார். மேற்கு ஆசியாவில் குறிப்பாக இஸ்ரேலுடன் இந்தியா நெருங்கி ஒத்துழைப்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பதாக அவர் கூறினார், இதனால் அரபு நாடுகளிலும் இந்தியாவின் அந்தஸ்து அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்குமிடையே சர்ச்சை இல்லை என்பதை உலகம் அறிந்திருப்பதாக கூறியுள்ளார்.

கோவிட் 19 தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி.

        கோவிட் 19 தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
        கோவிட் தொற்றுக்கான தடுப்பூசி ஆராய்ச்சி பணிகள் குறித்து இன்று ஆய்வு நடத்திய பிரதமர், பரிசோதனைகள் செய்து கொள்ள முன்வரும் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் விரைவாக பரிசோதனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
    மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பூசி குறைந்த செலவில் எளிதில் கிடைக்க செய்வது என்ற அரசின் உறுதிபாட்டியும் இந்த ஆய்வின் போது பிரதமர் மீண்டும் உறுதிபடுத்தினார்.
    அதேவேளையில், கோவிட் 19 தொற்றுக்கு எதிராக அதிகபட்ச உஷார் நிலையில் இருப்பதோடு, தொடர் கண்காணிப்பையும், மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
    மேலும் கோவிட் தொற்றுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய சிகிச்சை முறைகளை அங்கீகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

கோவிட் 19 தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான பணிகள் குறித்து பிரதமர் நேற்று ஆய்வு செய்தார்.

கோவிட் 19 தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான பணிகள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். பரிசோதனை தொழில்நுட்பம் மருந்துகள் சிகிச்கை மற்றும் நோயாளிகள் தொடர்பு போன்றவை குறித்து அவர் கேட்டறிந்தார்.
தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் கூறினார். இரத்த மாதிரிகள் கணக்கெடுப்பு பரிசோதனை புள்ளி விவரங்கள் போன்றவற்றை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூலம் தடுப்பு மருந்து விநியோகம்  பாரம்பரிய மருத்துவ சிகிச்சை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். ஆயுஷ் மருத்துவ ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
அனைவருக்கும் நியாயமான விலையில் மருந்து கிடைக்கவும் பரிசோதனை கருவிகள் சிகிச்சை போன்றவற்றில் இந்தியா பிற நாடுகளை ஒப்பிடுகையில் முண்ணணியில் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தொற்றுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே, விஜயராகவன் மற்றும் மூத்த விஞ்ஞானிகளும் அதிகாரிரகளும் கலந்து கொண்டனர்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது.
நேற்று சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது.
அதிகபட்சமாக விராட்கோலி 48 ரன் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ராகுல் 61 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில், மும்பை அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.
அபுதாபியில் நடைபெறவுள்ள இப்போட்டி, இரவு ஏழரை மணிக்கு தொடங்குகிறது.
Pin It