செய்திச் சுருக்கம் 19.11.20

ஊரடங்கு காலத்தில் அரசின் சேவைகளை விரைவாகவும், முறையாகவும் பயனாளிகளுக்கு கொண்டு சேர்த்ததில், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தது- பிரத

மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திரமோடி கூறியுள்ளார்.
பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில் இன்று காணொலி காட்சி வாயிலாக அவர் உரையாற்றினார்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின் பலன்கள் ஒரு நொடியில் அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஏழை மக்கள் முறையாகவும், விரைவாகவும் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கு தகவல் தொழில்நுட்பம் உறுதியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் இவற்றை நிறைவேற்றியதற்கு தொழில்நுட்பம்தான் உறுதுணையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிடட்டார்.
டிஜிட்டல்  மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளுக்கான உரிய சந்தை வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தி தந்துள்ளதாகவும், அவர் கூறினார்.
தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசின் கொள்கைகளை வகுப்பது தொடர்பாகவும், தொழில்நுட்பத் துறையினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் இந்தியா இயக்கம் மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இந்த இயக்கம் தற்போது திகழ்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பத் துறையில் இளைஞர்களுக்கான வாய்ப்புக்கு எல்லை இல்லை என்றும் அவர் கூறினார்.
தகவல் தொழில்நுட்பத்துறை, செயல்பாடுகள் நமக்கு பெருமை அளிப்பதாக உள்ளது என்றும், திரு நரேந்திரமோடி தெரிவித்தார்.

ஜம்மு-கஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர

ஜம்மு-கஷ்மீரில் பாதகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கமான வாகன சோதனையின்போது பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் சென்ற வாகனத்தை கண்டறிந்ததாக ஜம்மு மண்டல காவல்துறை இயக்குநர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட தொடங்கியதாகவும், இதன் காரணமாக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
அந்த வாகனத்தின் ஓட்டுநர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
11 ஏ கே-47 ரக துப்பாக்கிகளும், மூன்று கை-துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Pin It