செய்தித் துளிகள் 01.08.20

  • குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் அவர்கள் பக்ரீத் பண்டிகைக்காக இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  பக்ரீத் பண்டிகையானது தியாகத்தையும் நட்புணர்வையும் குறிப்பதாக கூறியுள்ள அவர், அனைவரது வாழ்வும் மேம்படுவதற்காக ஒருவர் மற்றொருவருக்கு உதவ வேண்டும் என்று இந்த பண்டிகை நமக்கு போதிக்கிறது என்று தனது வாழ்த்தில் அவர் கூறியுள்ளார்.

 

  • பிரதமர் திரு நரேந்த்ர மோதி அவர்களும் பக்ரீத் பண்டிகைக்காக மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். ஒரு நியாயமான, இணக்கமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க இந்த நாள் நமக்கு ஊக்கமளிக்கட்டும். என்று அவர் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.   வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா அவர்களுக்கு பிரதமர் ஈத்-அல்-ஆதா வாழ்த்து கூறியுள்ளார்.

 

 

  • புனித பண்டிகையான ஈத்-அல்-ஆதா எனப்படும் பக்ரீத் பண்டிகையானது இன்று நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது .பெருந்தொற்று காரணமாக மசூதிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக விரிவான, கடுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன; சுகாதார நெறிமுறைகளை பின்பற்றுமாறு வழிபாட்டாளார்களை வலியுறுத்தியுள்ளன.

 

  • நாடு முழுதும் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,094,374 ஆக அதிகரித்துள்ளது. . கடந்த 24 மணி நேரத்தில் 36,569  நோயாளிகள் குணமடைந்தனர். தில்லியில் மீட்பு சதவீதம்  19   ஆக சிறப்பாக உள்ளது.

 

 

  • கோவிட்19க்கான 525,689 சோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டன. தமிழ் நாட்டிலும் ஆந்திர ப்ரதேசத்திலும் பெரும் எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன இந்தியாவில் இறப்பு விகிதம் 2.15 சதவிகிதமாக குறைந்துள்ளது.

 

  • இன்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது. இருப்பினும் சில மானிலங்கள் இரவு நேர ஊரடங்கை தொடர உள்ளன. மக்கள் கூடும் நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்கள் திறப்பு, மெட்ரோ ரயில் சேவை,  சர்வதேச விமான போக்குவரத்து போன்றவற்றிற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

  • ஜம்மு கஷ்மீரின் ரஜோரி பகுதியில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இந்திய ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.  பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
  • லடாக்கின் கிழக்கு பகுதியில் சீனாவின் சமீபத்திய ஆக்கிரமிப்பும், பூட்டான் நாட்டில் பெய்ஜிங்க் கோரும் ப்ரதேச உரிமைகளும் சீனாவின் நோக்கங்ககளை குறிப்பிட்டு காட்டுவதாக அமெரிக்க உள்துறை செயலர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.

 

  • சாபஹார் துறைமுகத்தில் செயல்பாடுகளை துவங்குவதற்காக தேவையான உபகரணங்களை நிறுவுதல் மற்றும் கட்டுமான பணிகளை இந்தியா தொடர்ந்து வருவதாக இரான் நாட்டின் சாலைகள் மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை இணை அமைச்சர் மொஹம்மத் ரஸ்டாட் கூறியுள்ளார்.

 

 

  • ஹாங்காங்கில் நடைபெற இருந்துஅ உள் தேர்தல்களை சீனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைத்துள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராக சுய தன்னாட்சி பகுதிகளில் எதிர்ப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
Pin It