செய்தித் துளிகள் 03.08.20

1) இது வரை நாட்டில், 11,86,203   கோவிட் 19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 40,574 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மீட்பு விகிதம் இப்போது 65.77% ஆக உள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

2) கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3,81,027 கோவிட் 19 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

3) உள் துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கர்நாடக முதல்வர் பி எஸ் எடியூரப்பா ஆகியோருக்கு கோவிட் 19 தொற்று உறுதி. உள் துறை அமைச்சர் குருகிராமில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

4) மூத்த கேபினட் அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் , உள்துறை அமைச்சர் விரைந்து நலம் பெற வாழ்த்து

5) ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – ஆஸ்ற்றா ஜெனெகாவின் கோவிட் 19 தடுப்பு மருந்துக்கான இரண்டாம் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள பூனாவைச் சேர்ந்த செரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுமதி

6) 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு உறுதி. பிரதமரின் கிசான், இ-நாம் திட்டங்களால் விவசாயிகள் பெரும் பயன் பெற்றுள்ளதாக வேளாண் துறை இணைஅமைச்சர் கைலாஷ் சௌத்ரி கூறியுள்ளார்.

7) சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பில் 87 நாடுகள் உறுப்பினர்களாகியுள்ளன. விரைவான சூரிய சக்தி பயன்பாட்டுக்காக இந்தியாவும் ஃப்ரான்ஸும் தொடங்கிய கூட்டமைப்பாகும் இது.

8) ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள், கோவிட் 19 உட்பட பல விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை. அமைச்சர்கள் அளவிலான இத்தகைய பரிமாற்றங்கள்     மிகவும் அரிதானவை.

9) அடுத்த இரண்டு மாதங்களில் கோவிட் 19 கட்டுக்குள் வரவில்லையென்றால் பல நாடுகளின் பொருளாதார நிலை சீரழியும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை

10) ஐக்கிய அரபு அமீரகத்தில் பல இடங்களில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐ பி எல்  2020 நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய பிசிசிஐ-க்கு இந்திய அரசு அனுமதி

Pin It