செய்தித் துளிகள் 04.08.20

1)     இந்தியாவில் இது வரை 12,30,509 கோவிட் 19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 44,306 பேர் குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் சுமார் 66% ஆக உள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

2)  நாட்டில் இது வரை 2 கோடிக்கும் மேல் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 6,61,892 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3) பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ஆஃப்கன் அதிபர் அஷ்ரஃப் கனியுடன் உரையாற்றினார். பெருந்தொற்று காலத்தில் இந்தியா அளித்த உணவு மற்றும் மருத்துவ உதவிகளுக்கு கனி நன்றி தெரிவித்தார். இந்தியாவின் ஆதரவும் ஒத்துழைப்பும் தொடரும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

4)  வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை (டிபிஇபிபி) 2020,  2025 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டாலர் ஏற்றுமதி உட்பட 25 பில்லியன் டாலர் வருவாயை ஈட்ட வழிவகுக்கும்.

5) ஜம்மு காஷ்மீரின் மன்கோட் பகுதியில் பாகிஸ்தான் சண்டை நிறுத்த ஒப்பந்த மீறல் – இந்தியா பதிலடி

6) ரகசிய ராணுவ நீதிமன்றம் ஒன்றால் ஏப்ரல் 2017-ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவுக்கு ஆதரவாக ஒரு வழக்கறிஞரை நியமிக்க இந்தியாவை அனுமதிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு இஸ்லாமாபாத் உயர் நீதி மன்றம் உத்தரவு. சர்வதேச நீதிமன்றம் இந்த மரண தண்டனையை ரத்து செய்யவும் கூறியுள்ளது.

7) மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கன மழைக்கான எச்சரிக்கை. பல பகுதிகள் பாதிப்பு. போக்குவரத்து பெருமளவில் ஸ்தம்பித்தது.

8) ஆஃப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் ஒரு சிறையில் ஐ எஸ் ஐ எஸ் தாக்குதல். 29 பேர் உயிரிழப்பு, பலர் காயம். தாக்குதலுக்குப் பிறகு, 330 கைதிகள் மாயம்

9) ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலா மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கோவிட் 19 தாக்கம் அதிகரிப்பதை அடுத்துக் கடும் ஊரடங்கு அறிவிப்பு.

10)  ஸ்பெயினின் முன்னாள் மன்னர், யுவான் கார்லோஸ் I,  நாட்டை விட்டு வெளியேறினார். அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்பது குறித்துத் தகவலில்லை

Pin It