செய்தித் துளிகள் 05.08.20

1) வேத மந்திரங்கள் முழங்க ராமர் கோயிலுக்கான பூமி பூஜையைப் பிரதமர் செய்தார்

2) உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர் எஸ் எஸ் தலைவர் மோஹன் பகவத், ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் தவத்திரு ந்ருத்யகோபால் தாஸ் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

3) இந்த வரலாற்று நிகழ்வைக் காணும் பாக்கியம் பெற்றதாகப் பிரதமர் தமது உரையில் தெரிவித்தார். நற்குணங்களின் உருவமாகவும் அனைவருக்கும் ஊக்கமளிப்பவராகவும் ராமர் இருப்பதாகக் கூறினார்

4) இன்று நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளதாகவும் பல நூற்றாண்டுப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தேசம் முழுவதும் ஒன்றிணைந்து ராமரின் வழியில் பயணிக்கவேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

5) லட்சக்கணக்கான மக்களின் உறுதி, நம்பிக்கை, தியாகம் ஆகியவற்றுக்கு ஒரு அர்ப்பணிப்பாக இந்தக் கோயில் இருக்கும் என்று கூறிய அவர், அனைவரின் மனதிலும் நிறைந்திருக்கும் ராமரின் வழியில் எப்போதும் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

6) ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஒரு புதிய உதயத்தைக் காட்டும் என்றும் அயோத்தியில் மிகப்பெரிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

7) முன்னதாக, அயோத்தி வந்தடைந்த பிரதமர் அங்குள்ள ஹனுமான் கர்ஹி கோயிலுக்குச் சென்று ராம் லல்லாவை தரிசனம் செய்தார்.

8)  இது வரை நாட்டில், 12,82,215 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 51,706 பேர் குணமடைந்துள்ளனர்.

9) கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில், 6,19,652 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

10) லெபனானில் உள்ள பெய்ருட்டில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், நாலாயிரம் பேர் காயமடந்தனர். 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த ஒரு கிடங்கில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

Pin It