செய்தித் துளிகள் 06.08.20

 

1) இந்தியாவில் கோவிட் 19-ல் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 13,28,336. கடந்த 24 மணி நேரத்தில், 46,121 பேர் குணமாகியுள்ளனர். மீட்பு விகிதம் 67.62% என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2) கடந்த 24 மணி நேரத்தில் 6,64,949   கோவிட்-19  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3) ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா நியமனம்.

4) அஹமதாபாத் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட  தீவிபத்தில் உயிரிழந்த 8 கோவிட் 19 நோயாளிகளின் இறப்புக்குப் பிரதமர் இரங்கல். முதல்வர் விஜய் ரூபானியிடம் நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்.

5) மழையால மும்பையில் பலத்த பொருட்சேதம். மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு கோரிக்கை.

6) அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு, குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பலத்த காற்றுடன் கன மழைக்கான எச்சரிக்கை.

7) இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜைடஸ் கேடிலா -வின் கோவிட் 19 தடுப்பு மருந்து முதல் சுற்று மருத்துவப் பரிசோதனையில் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு சுற்றுகளுக்கு நிறுவனம் தயார் நிலை.

8) அண்மையில் நடந்த நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்துக்குப் பின்னர், ரெபோ மற்றும் ரிவர்ஸ் ரெபோ விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு. தென்மேற்குப் பருவ மழை நன்றாக இருந்ததால், வேளாண் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு.

9) ஐ நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை  சீனா எழுப்புவதை இந்தியா கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தியாவின் உள் விவகாரங்களில்தலையிட வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

10) பெய்ருட் வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 135 ஆக உயர்வு. அலட்சியம் காரணமாக, துறைமுக அதிகாரிகள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Pin It