செய்தித் துளிகள் 1 7 2020.

1) நாட்டில் கோவிட் 19 நோயிலிருந்து 3,47,979 நோயாளிகள் மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 13,147 பேர் குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் இப்போது 59.4%.
2) தில்லியில் தினசரி பாதிப்புக்களில் லேசான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தில்லியில் மீட்பு விகிதம் இப்போது 67% ஆகும்.
3) 59 சீன செயலிகளை தடை செய்யும் முடிவை இந்தியர்கள் வரவேற்றுள்ளனர். இந்திய ஸ்டார்ட் அப்கள் தங்கள் கண்டுபிடிப்புகளால் இடைவெளியை நிரப்ப முடியும் என்று மக்கள் கருதுகின்றனர்.
4) ஜம்மு-காஷ்மீர், சோபூரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் ஜவானும் ஒரு குடிமகனும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 3 சிஆர்பிஎஃப் வீரர்களும் காயமடைந்தனர்.
5) 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேஷன்களை வழங்கும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா, ஒரு முக்கிய உணவுத் திட்டமாக சர்வதேசப் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது.
6) சீனா ஹாங்காங் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதித்த பின்னர், புதிய எதிர் நடவடிக்கைகள் குறித்து சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா அதை ஒரு ‘சோகமான நாள்’ என்று அழைத்தது.
7) ஜி 7 நாடுகளும் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டம் சுமத்தப்படுவதை விமர்சித்துள்ளன. 7 தேசக் குழு, இச்சட்டம் ஹாங்காங் அடிப்படை சட்டத்துடன் ‘இணங்கவில்லை’ என்று குறிப்பிட்டது.
8) இந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி மருந்து, மனித சோதனைகளின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கு சென்றுள்ளது . இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், மனித சோதனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
9) தேசிய மருத்துவர்கள் தினமான இன்று, இந்தியாவில் மருத்துவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான நீண்ட போரில் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும், ஒரு சிறந்த மருத்துவருமான டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறந்த நாளில் தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
10) சந்தேகத்திற்குரிய, போலி பைலட் லைசென்ஸ் பிரச்சினை காரணமாக, பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் தங்கள் கண்டத்தில் பறக்க, ஐரோப்பா தடை விதித்துள்ளது.

Pin It