செய்தித் துளிகள் 10.7.20

1) தனது மற்றும் உலகப் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிக்க, சீர் திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவற்றுக்கு இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் கூறினார்.

2) மத்தியப் பிரதேசம்  ரேவாவில் ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் திட்டத்தைத் துவக்கி வைத்தார் பிரதமர். 15 லட்சம் டன் அளவிலான கரியமில வாயு உமிழ்வை இந்த 750 மெகாவாட் திட்டம் குறைக்கும்.

3) இந்தியாவின் கோவிட் 19 மீட்பு விகிதம் 62%க்கும் மேலாகியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது நோய் பாதிப்பில் உள்ளவர்களைக் காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகமாகும்

4) இந்தியாவின் மொத்த கோவிட் 19 நோயாளிகளில் 90% எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 49 மாவட்டங்கள் 80% நோயாளிகளைக் கொண்டுள்ளன.

5) உலகில் மிகக் குறைந்த அளவவாக, இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களில் 538 பேருக்கு நோய்த் தாக்கியுள்ளதாகவும் 15 பேர் தான் உயிரிழக்கிறார்கள் என்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உலக சராசரி, 1453 நோயாளிகளாகவும் 68.7 இறப்புகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

6) இன்று காலை 9 மணி வரை நாட்டில் 4,95,516 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,138 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் 62.4% ஆக உள்ளது. தலைநகர் தில்லியில் 21,567 பேர் தற்போது நோய் பாதிப்பில் உள்ளனர். குணமடைந்தோர் 82,226 பேர். தில்லியில் மீட்பு விகிதம் 76.8% ஆக உள்ளது

7) 2,83,659 கோவிட் 19 பரிசோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் நாடெங்கிலும்  நடத்தப்பட்டுள்ளன.

8) இந்தியாவில் சமூகத் தொற்று இல்லை என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்துள்ளது. வைரஸ் தாக்கத்தின் மாறி வரும் சூழலை அமைச்சகம் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9) சீனாவின் சிஞ்சியாங் பொது பாதுகாப்பு பணியகத்தின் சில உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதால் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையில் நிலவி வரும்  பதற்ற நிலை அதிகரித்துள்ளது

10) கோவிட் 19 ஐ விட அதிக இறப்பு விகிதம் கொண்ட “அறியப்படாத நிமோனியா” பற்றி சீனா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. “அறியப்படாத நிமோனியா” கஜகஸ்தானில் தோன்றி, 6 மாதங்களில் 1,772 இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pin It