செய்தித் துளிகள் 16 9 2020

1) சீன இராணுவத்தின் வன்முறை நடத்தை அனைத்து விதிமுறைகளையும் மீறியதாக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்தியா அமைதியைக் காக்க உறுதியுடன் உள்ளது என்றும், அதேசமயம், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் சபைக்குத் தெரிவித்தார்.

2) மக்களவை அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா 2020 ஐ நிறைவேற்றியுள்ளது. இந்தத் திருத்தம் வேளாண் துறையை மாற்றுவதையும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நுகர்வோர் விவகாரத்துறை துணை அமைச்சர் ராவ்சாஹேப் டான்வே பாட்டீல் தெரிவித்தார்.

3) பீகார், தர்பங்காவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது மாநிலத்தின் இரண்டாவது எய்ம்ஸ் ஆகும். ஹரியானா மாநிலத்தில் சுற்றுப்பாதை ரயில் சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4) தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக, செஸ் நிதியில் இருந்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ .5,000 / – கோடியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. எம்என்ரேகா திட்ட்த்தின்கீழ், ஒரு நாளைக்கான ஊதியம் ரூ .202 / – ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை மத்தியத் தொழிலாளர்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்தார்.

5) ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சல்மே கலீல்சாத் புதுடில்லிக்கு விஜயம் செய்தார். அவர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார். தோஹாவில் நடந்து கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் சமாதானப் பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய ‘எதிர்கால நடவடிக்கைகள்’ மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். திரு. கலீல்சாத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோரையும் சந்தித்தார்.

 

6) இரண்டு கோவிட் 19 தடுப்பூசி மருந்துகளின் முதலாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள், சிறந்த பாதுகாப்புக்கான முடிவுகளைக் காட்டியுள்ளன என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைத் இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே மாநிலங்களவையில் தெரிவித்தார். இதற்கிடையில், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ), இந்தியாவில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் 19 தடுப்பூசி மருந்தின் சோதனைகளை மீண்டும் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த வாரம் இங்கிலாந்தில், இந்தத் தடுப்பூசி மருந்து சோதனையை ஏற்றுக் கொண்ட நபருக்குப் உடல்நலிவு எழுந்ததையடுத்து, இந்த சோதனைகள் நிறுத்தப்பட்டன.

7) இந்தியாவில் கோவிட் 19யிஇலிருந்து 39,42,360 பேர் குணமடைந்துள்ளனர். 78.53% மீட்பு வீதத்துடன், இந்தியா இப்போது உலகிலேயே அதிக மீட்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 82,961 பேர் குணமடைந்துள்ளனர்.

8) கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கோவிட் 19 க்கு 11,16,842 சோதனைகள் நடத்தப்பட்டன.

9) வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் முன்னிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனுடன் இஸ்ரேல் இராஜதந்திர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தங்கள் மத்திய கிழக்கில் ஒரு புதிய விடியலைக் குறிக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

10) பஞ்சத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள  யேமனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு, ஐ.நா., வளைகுடா நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகள், அரபு உலகின் மிகவும் வறிய நாடான யேமனுக்கு 340 கோடி டாலர் நிதியுதவி வழங்கவிருந்தன. எனினும், இந்த ஆண்டில் இதுவரை எதுவும் வழங்கப்படவில்லை.

Pin It