செய்தித் துளிகள் 2.30 pm 31 3 2020

1) ஊர் திரும்பும் தொழிலாளிகளுக்குத் தேவையான வசதிகளை தன்னார்வலர்கள் மற்றும் ஆலோசகர்களின் உதவியுடன் வழங்குமாறு, மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

2) தில்லி நிஜாமுதீனில் மதக்கூட்டத்தை நடத்திய டப்லீகி ஜமாத் மற்றும் பிற ஏற்பாட்டாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, குரல்கள் வலுக்கின்றன.

3) இதுவரை, கொரோனா நோயிலிருந்து 140 பேர் குணமாகியுள்ளனர்.

4) ஊர் திரும்பும் தொழிலாளிகளுக்குத் தேவையான உணவு, உறைவிடம் போன்ற வசதிகள் பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும், அவர்களிடையே, சமூக விலகல் மற்றும் பிற சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாகப் பராமரிக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

5) உதவியாளர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் தனிமையில் உள்ளார்.

6) அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, தென்கொரியா மற்றும் 59 நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என, ஜப்பான் தனது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

7) யேமனில் சவூதி அரேபிய கூட்டுப் படைகளுக்கும், ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை தொடர்கிறது.

8) சரிந்துவரும் உலக கச்சா எண்னெய் விலையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான செயலுத்திகளைத் தீர்மானிக்குமாறு, ஓபெக் மற்றும் ரஷ்யாவை வெனிசுவேலா கேட்டுக் கொண்டுள்ளது.

9) அமெரிக்காவில், வர்ஜீனியா, மேரிலாந்து, கொலம்பியா மாகாணங்களில் மக்கள் ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை வீட்டினுள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

10) அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடக்கும் மைதானமான ஃப்ளஷிங் மெடோஸ், நியூயார்க்கிலுள்ள கொரொனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11) 10 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

12) பொது இடங்களில் முகக் கவசம் அணிவது செக் குடியரசில் கட்டயமாக்கப்பட்டுள்ளது.

13) உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் அனுதினமும் ஈடுபட்டு வருவதால், பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

14) வங்கிகளும், ஏடிஎம்களும் வழக்கம்போல் இயங்குவதை உறுதி செய்யுமாறு, அமைச்சரவைச் செயலர், மாநிலத் தலைமை செயலர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

15) பி எம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடைகள் குவிகின்றன. கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா 80 லட்சமும், இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், 25 லட்சம் ரூபாயும் நன்கொடையாக அளித்துள்ளனர்.

Pin It