செய்தித் துளிகள் 2 7 20.

1) நாட்டில் கோவிட் 19 நோயிலிருந்து 3,59,860 நோயாளிகள் மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 12,063 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மீட்பு வீதம் கிட்டத்தட்ட 60% ஆகும்.
2) நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,29,588 சோதனைகள் நிறைவடைந்தன.
3) கோவாவின் சுற்றுலாத் துறை இன்று முதல் திறக்கப்பட உள்ளது. 250 ஹோட்டல்கள் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு இல்லையென உறுதி செய்யப்பட்ட உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்களில் தங்கலாம்.
4) அசாம் சோதனையை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 10,000 பேர் பரிசோதிக்கப்படுவார்கள். குவஹாத்தி கடுமையான ஊரடங்கின் கீழ் உள்ளது.
5) கோவிட்-19 நோய்க் கிருமி வைரஸின் தோற்ற வடிவைத் தனிப்படுத்துவதில், திப்ருகரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் வெற்றி கண்டுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய இந்தியாவின் 3 வது நிறுவனம் இதுவாகும்.
6) ஜூலை 3 முதல் பத்து நாட்களுக்கு நவி மும்பையில் முழுமையான ஊரடங்கு செயல்படுத்தப்படும். கோவிட் 19 பாதிப்புக்கள் பெருமளவில் அதிகரித்தது, இந்த ஊரடங்கிற்கு பவழிவகுத்தது.
7) புதன்கிழமை, அமெரிக்காவில், 52,000 பேருக்கு கோவிட் 19 நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது.  நாட்டில் மொத்த பாதிப்புக்கள் 27.4 லட்சத்துக்கும் அதிகம்.
8) ரஷ்ய வாக்காளர்கள்  ஒரு வாக்கெடுப்பில் அதிபர் புடினுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர், இது  விளாடிமிர் புடினை 2036 வரை பதவியில் தொடர அனுமதிக்கும்.
9)  ஹாங்காங் எதிர்ப்பாளர் ஒருவர்,சீனாவின் புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபரானார்.  ஹாங்காங்கின் நிலைமை குறித்து  உன்னிப்பாகக் கவனித்து வருவதாக, ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா அறிவித்துள்ளது,
10) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவர் சஷாங்க் மனோகர், தனது தற்போதைய பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்துள்ளார்.

Pin It