செய்தித் துளிகள்

1) கொரோனா வைரஸ் நெருக்கடி முடிவுக்கு வரும் வரை, அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பளம் தொடர்ந்து வழங்கப்படும்.

2) ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை, சாலைக் கட்டணம் வசூலிக்கப்படாது.

3) கொரோனா தொற்றுநோய் குறித்து ஜி 20 நாட்டுத் தலைவர்கள் தொலைக்காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்..

4) கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோதி அவர்களும், ரஷ்ய அதிபர் புடின் அவர்களும் விவாதித்தனர்.

5) அத்தியாசியப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது.

6) ஆஃப்கானிஸ்தானில் குருத்வாராவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். ஹக்கானி வலையமும் ஐ எஸ் ஐ எல் அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளன.

7) இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது.

8) உலகில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு வரும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

9) அமெரிக்காவில் நியூயார்க் மாவட்டத்தில் அதிகப்படியான கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

10) இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழப்புக்கள் தொடர்ந்து வருகின்றன.

11) கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 602. குணமடைந்தோர் 43. உயிரிழந்தோர் 12.

12) கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட, 200 கோடி டாலர் நிதியுதவியை ஐ.நா. பொதுச் செயலர் குட்டரெஸ் அவர்கள் நாடியுள்ளார்.

13) வறிய நாடுகளின் கடனைத் தற்காலிகமாக, கொரோனா நெருக்கடி தீரும்வரை, நிறுத்தி வைக்க உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் கோரியுள்ளன.

14) கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட ஒரே வழி சமூக தூர விலகல் முறையைப் பின்பற்றுவதுதான் என உலகத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

 

 

Pin It