செய்தித் துளிகள் 30 6 2020.

1) பிரதான் மந்திரி அன்ன கல்யாண் திட்டத்தை நவம்பர் வரை நீட்டிப்பதாக, பிரதமர் திரு நரேந்திர மோதி அறிவித்தார். ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வீதம்,  80 கோடி இந்தியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்கும்.

2) சமூக தூரவிலகல் விதிமுறைகள், கைகளின்  சுகாதாரம் மற்றும் முகக் கவசம் அணிவது போன்றவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பிரதமர் மக்களைக் கேட்டுக் கொண்டார். இவற்றை அதிகாரிகள் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

3) காய்ச்சல், சளி, இருமல் போன்ற பல நோய்களைக் கொண்டுவருவதால், மழைக்காலத்தில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

4) நாட்டில் கோவிட் 19 நோயிலிருந்து 3,34,822 பேர் மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 13,099 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தேசிய மீட்பு விகிதம் 59% க்கு மேல். மொத்தம் 85,161 பாதிப்புக்களில் 56,000 மீட்டெடுப்புகளுடன், தில்லி 66% மீட்பு விகிதத்தை பதிவு செய்துள்ளது.

5) கோவிட் 19 க்கான 2,10,292 சோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்டன. தொற்றுநோய் பரவியதில் இருந்து, இதுவரை, நாட்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

6) ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜ்பெஹெராவில் நடந்த தேடுதல் வேட்டைநின்போது, 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

7) பாரமுல்லா மாவட்டம் நௌகாம் பிரிவில் பாகிஸ்தான் மீண்டும் போர்நிறுத்தத்தை மீறியுள்ளது. பாகிஸ்தான் மோர்டார் வகை குண்டு வீச்சுடன் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. யுத்த நிறுத்த மீறலுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

8) இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கோர் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தைகள் தற்போது லடாக்கின் சுஷூலில் நடைபெற்று வருகின்றன. கிழக்கு லடாக்கில் மோதல் தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக இத்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

9) இரண்டாவது ஊரடங்குத் தளர்வு நாளை முதல் தொடங்கவுள்ளது. பல கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. இரவு ஊரடங்கு உத்தரவு 10PM முதல் 5AM வரை இருக்கும். அளவீடு செய்யப்பட்ட முறையில், அதிக ரயில் மற்றும் விமான சேவைகள் மீண்டும் தொடங்கவுள்ளன.

10) சர்வதேச விமான சேவைகள், மெட்ரோ ரயில், அனைத்து கல்வி நிறுவனங்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சினிமா அரங்குகள், அரசியல் மற்றும் மதக் கூட்டங்கள் ஜூலை 31 வரை தடை செய்யப்படும்.

11) 600 மெகாவாட் கோலோங்சு நீர் மின் திட்டத்திற்கான சலுகை ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் பூட்டான் கையெழுத்திட்டன. இது இரு நாடுகளுக்கும் இடையில் மின் துறையில் அதிக ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12) கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து ஆராய ஒரு குழுவை சீனாவுக்கு  உலக சுகாதார அமைப்பு அனுப்பவுள்ளது.

Pin It