செய்தித் துளிகள் 31.7.20

1) இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட மொரீஷியஸ் உச்ச நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜுக்னாத் ஆகியோர் திறந்து வைத்தனர்.

2) பிரதமர் மோடி கூறுகையில், இந்தியாவும் மொரீஷியஸும் சிறந்த நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன, புதிய உச்சநீதிமன்ற கட்டிடம் நமது ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளுக்கு ஒரு அடையாளமாகும். இந்தியாவின் வளர்ச்சிமாதிரி மனித மையமானது என்றார்.

3) ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை செயல்படுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சகம் அனைத்து மாநிலங்களின் அமைச்சர்களுடன் இணையவழிச் சந்திப்பை ஏற்பாடு செய்தது. ஆயுஷ் அமைச்சர் (ஐ/சி) ஸ்ரீபாத் யெசோ நாயக் தேசிய ஆயுஷ் மிஷனின் பிரத்யேக போர்ட்டலைத் தொடங்கி வைத்தார்.

4) பிரிக்ஸ் நாடுகளில் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் அனைத்து சிறந்த நடைமுறைகளையும் காட்சிப்படுத்தக்கூடிய தளத்தை இந்தியா வழங்க முடியும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

5) 1,057,805 (10 லட்சம் 57 ஆயிரம் 805) நோயாளிகள் இந்தியாவில் கோவிட்19 இலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 37,223 நோயாளிகள் குணமடைந்தனர். மீட்பு வீதம் 64.54%ஆகும்.

6) கோவிட்19க்கான 642,588 சோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டன. பெரும்பாலான மாநிலங்கள் இப்போது பெரியளவில் சோதனைகள் நடத்துகின்றன.

7) விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் விவசாயத் துறையில் ஸ்டார்ட்-அப்களை அரசு ஊக்குவிக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

8) பெஷாவரில் உள்ள நீதிமன்றத்தில் அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளான பாகிஸ்தான் நபர் ஒருவர் கொல்லப்பட்டார். ‘சீர்திருத்தங்களைத் தொடர’ அமெரிக்க வெளியுறவுத்துறை பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டுள்ளது.

9) செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் நாசா விண்கலம் சில தொழில்நுட்ப சிக்கல்களைச் சந்தித்தபின் இயல்பாக  இயங்குகிறது.

10) இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐயின் ஐபிஎல் ஆட்சிக்குழு ஞாயிற்றுக்கிழமைகூடி ஐபிஎல் 2020 அட்டவணை மற்றும் பிற ஏற்பாடுகளை இறுதி செய்யும். ஐ.பி.எல் போட்டிகள் வெளிநாட்டில் நடத்தப்படலாம். இந்த ஆண்டு ஐ.பி.எல் நடத்துவதற்கான இறுதி அனுமதியை இந்திய அரசு அளிக்கும்.

 

Pin It