சேவைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கால அவகாசத்தை நீட்டிக்க ஆயத்தமாக இருப்பதாக உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கும் அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்குகளையும் தொலைபேசியையும் இணைப்பதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அனுமதிக்க ஆயத்தமாக உள்ளதாக  மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் திரு கே கே வேணுகோபால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். எனினும், கூடுதல் கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Pin It