சோமாலியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவராக விளங்கிய அப்தி ஹக்கிம், விமானத் தாக்குதலில் உயிரிழப்பு.

சோமாலியாவில் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு அப்தி சமத் முகமது காலன் கூறியுள்ளார்.

வடமேற்கு மாகாணத்தில் உள்ள பன்ட்லாண்ட் பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக அவர் கூறினார். சோமாலியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவராக விளங்கிய அப்தி ஹக்கிம் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Pin It