சோமாலியா தலைநகர் மொகதிஷுவில்  குண்டுகள்  வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு.

சோமாலியா தலைநகர் மொகதிஷுவில் நேற்று 4 கார்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள்  வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். ஒரு ஓட்டல் அருகே 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததாகவும், நான்காவது குண்டுவெடிப்பு சோமாலியா காவல்துறையின் குற்றப் புலனாய்வு அலுவலகம் அருகே நிகழ்ந்ததாகவும் அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு சோமாலியா அல் சபாப் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது

Pin It