ஜப்பானில் சூறாவளியின் காரணமாக விமான சேவை ரத்து.

நேற்று, ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் சூறவளி காரணமாக பலத்த காற்று வீசுவதுடன் மழையும் பெய்ததால், டோக்கியோ மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வந்து செல்லும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரிய சேதம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. ஷன்ஷான் எனப்படும் இந்த சூறாவளி, மதியம் சற்று பலவீனமடைந்தது. இது தரைப்பகுதிக்குள் செல்லாததால், பெருத்த மழை மற்றும் காற்றிலிருந்து ஜப்பான் தப்பித்துக் கொண்டது.

Pin It