ஜம்மு – காஷ்மீரில், சோபியான் மாவட்டத்தில் கடத்தப்பட்ட ராணுவ வீரர் ஒளரங்க சாயீப்பின் உடல் கண்டெடுப்பு.

ஜம்மு – காஷ்மீரில், சோபியான் மாவட்டத்தில் கடத்தப்பட்ட ராணுவ வீரர் ஒளரங்க சாயீப்பின் உடல், தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அருகே குஷூ பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. தெற்கு காஷ்மீரின் சோபியான் பகுதியில் நேற்று இந்த ராணுவ வீரர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். கடந்த மாதம் புல்வாமா மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் குழுவில்  ஒளரங்க சாயீப் பணி புரிந்தார். புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில், ஹிஸ்புல் தீவிரவாத இயக்கத்தின் தளபதி ஜமீர் டைகர் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த படைப்பிரிவில் இவர் பணியாற்றினார்.

Pin It