ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் பதுங்கும் இடம் கண்டுபிடிப்பு – ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் பதுங்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, ராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த கூட்டுக் குழுக்கள், பூஞ்ச் மாவட்டம் சோப்பியான் பகுதியில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டன. அப்போது கத் பஞ்சால் என்னும் இடத்தில் தீவிரவாதிகளின் பதுங்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கூட்டுப்படையினர் பறிமுதல் செய்தனர். நவீன ஏ கே – 56 ரக தானியங்கித் துப்பாக்கிகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படும்  ஏராளமான துப்பாக்கிக் குண்டுகள், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மாநிலத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில், தீவிரவாதிகள் மேற்கொள்ளவிருந்த நாச வேலைகள் முறியடிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

 

Pin It