ஜம்மு காஷ்மீரில் மூத்த பத்திரிக்கையாளர்  சயீத் ஷுஜாத் புகாரி, அடையாளம் தெரியாத 4 நபர்களால் சுட்டுக் கொலை.

ஜம்மு காஷ்மீரில் மூத்த பத்திரிக்கையாளர்  சயீத் ஷுஜாத் புகாரி, அடையாளம் தெரியாத 4 நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் உள்ள பத்திரிகை வளாகத்தில் நேற்றுமாலை வாகனத்தில் வந்த இவர்கள், ஷுஜாத் புகாரியை நோக்கிச் சுட்டனர். இந்த சம்பவத்தின்போது பாதுகாப்புப் படையினரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஷுஜாத் புகாரி  உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இவருடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஷுஜாத் புகாரி,  ரைசிங் கஷ்மீர் என்ற ஆங்கில நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த மூத்த பத்திரிக்கையாளர் ஆவார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

ஷுஜாத் புகாரி மறைவுக்கு உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஜம்மு கஷ்மீர் மாநில முதல்வர் திருமதி மெஹ்பூபா முப்தி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Pin It