ஜம்மு காஷ்மீரில் லடாக் பகுதிக்கு பிரதமர் திரு நரேந்திர மோதி நாளை பயணம்.

ஜம்மு காஷ்மீரில் லடாக் பகுதிக்கு பிரதமர் திரு நரேந்திர மோதி நாளை பயணம் செய்யவுள்ளதையொட்டி, லே நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்பயணத்தின்போது, பிரதமர, ரிமோட் கருவி மூலம், 14.2 கி.மீ ஸோஜில்லா குகைப் பாதைக்கு அடிக்கல் நாட்டுவார். அனைத்து பருவநிலைகளிலும் லடாக் பகுதிக்குத் தொடர்புகளை உறுதி செய்யும் இத்திட்டத்துக்கு, நடப்பாண்டு ஜனவரி மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

19 ஆவது குஷோக் பகுலா ரின்போசே என்ற பௌத்த ஆன்மீகத் தலைவரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்று உரையாற்றவுள்ளார். இந்த விழா ஆண்டு முழுவதும், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது. இதில் உலகெங்கிலுமிருந்தும் அதிகளவில் மக்கள் பங்கேற்கின்றனர். 2014 ஆம் ஆண்டு விஜயம் செய்த பின்பு, லே – லடாக் பகுதிக்கு பிரதமர் இரண்டாம் முறையாகச் செல்கிறார்.

Pin It