ஜம்மு காஷ்மீரில் 3 இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் வீர மரணம்.

 

ஜம்மு கஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட ஐந்துபேர்  உயிரிழந்தனர். இம்மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பூன்ச் பகுதியில், நேற்று மாலை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கருகே பாகிஸ்தான் துருப்புக்கள் அத்து மீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீர்ர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. பாந்திபோரா மாவட்டத்தில், ராணுவமும், போலீசாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது, தீவிரவாதிகள் சுட்டதில், இரு போலீசார் காயமைடைந்தனர். நேற்று மாலை, ஸ்ரீநகர் தால்கேட் பகுதியில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த ஒரு பொதுநபர், பின்னர் உயிரிழந்தார்.

Pin It