ஜம்மு-காஷ்மீர், சர்வதேச எல்லைப்பகுதியில்  பாகிஸ்தான்  ராணுவம், முகாந்திரமற்ற துப்பாக்கிச் சூடு – இந்திய எல்லை பாதுகாப்புப் படையின்   உதவித் தளபதி மற்றும்  நான்கு வீரர்கள்  பலி.

ஜம்மு-காஷ்மீர், சாம்பா மாவட்டத்தில்  சர்வதேச எல்லைப்பகுதியில்  பாகிஸ்தான்  ராணுவத்தின்  துப்பாக்கிச் சூட்டில், எல்லை பாதுகாப்புப் படையின்   உதவித் தளபதி மற்றும்  நான்கு வீரர்கள்  கொல்லப்பட்டனர். மேலும் 5 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது . இம்மாவட்டத்தின்  ராம்கர் பகுதியில்  நேற்று இரவு பத்து மணிக்கு சாம்லியால், நாராயண்பூர் எல்லைப்  பாதுகாப்புப் படையினர்  நிலைகள்  மீது பாகிஸ்தான்  ராணுவம் எவ்வித முகாந்திரமும் இன்றி துப்பாக்கிச்ச சூடு நடத்தியதாக  எல்லைப் பாதுகாப்புப்படை வட்டாரங்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர். இதற்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், அதிகாலை 2 மணி வரை துப்பாக்கிச் சண்டை தொடர்ந்ததாகவும் அந்த வட்டாரங்கள்  தெரிவித்தன.

 

Pin It