ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தூதர் அளித்துள்ள அறிக்கை  – இந்தியா நிராகரிப்பு.

ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தூதர் அளித்துள்ள அறிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. புதுதில்லியில் இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் திரு. ரவீஷ்குமார், இந்த அறிக்கையின் நோக்கம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவின் இறையாண்மைக்கும்  பிராந்திய ஒற்றுமைக்கும் எதிராக இந்தக் கருத்து அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அங்கு நடைபெறும் தீவிரவாதச் செயல்களை முறியடிப்பது அரசின் கடமை என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளைவிட்டு வெளியேறுமாறு ஏற்கனவே பலமுறை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியப் பகுதி குறித்து அந்த அறிக்கையில் தவறான, ஏற்றுக்கொள்ள  முடியாத தகவல்கள் உள்ளதாகவும்  அவர் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து அந்த அறிக்கையில் தகவல்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  ஜம்மு காஷ்மீர் மக்களின் நலனுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடைபெற்று வருவதாகவும் திரு ரவீஷ்குமார் கூறினார். இந்தியா தனது  எதிர்ப்பை  ஐநாவிடம் பதிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

Pin It