ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு இயற்கை சீற்றம் அறிவிப்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த  வாரத் துவக்கத்திலிருந்து நிலவும் கடுமையான பனிப்பொழிவை அம்மாநில அரசு சிறப்பு இயற்கை சீற்றமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி மற்றும் நிவாரணம் கிடைக்கும். மாநில தலைமைச் செயலாளர் திரு பி வி ஆர் சுப்பிரமணியம் தலைமையிலான மாநில பேரிடர் மீட்பு நிதியத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

காஷ்மீர் பகுதியில் இம்மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதி கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால், விவசாய நிலங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க 10 கோடி ரூபாயைத் தயாராக வைத்திருக்கவும் அதிகாரிகளுக்கு அம்மாநில தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

Pin It