ஜாகிர் நாயக்கிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட்

சர்ச்சைகுரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக்கிற்கு மும்பையின் தேசியப்  புலானாய்வு முகமை நீதிமன்றம் இன்று ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவர் தமது பொதுக் கூட்டங்களில், மதவாத குழுக்களுக்கு இடையே, விரோதம் மற்றும் வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதற்காக இந்த நடவடிக்கை.  மூன்று முறை சம்மன் அனுப்பியும் தங்கள் முன் நாயக் ஆஜராகவில்லை என்று தேசிய புலானாய்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, சிறப்பு நீதிபதி வி.வி. பாட்டீல் இந்த வாரண்டை பிறப்பித்தார்.

Pin It