ஜிஎஸ்டி கவுன்சிலின் 2 நாள் கூட்டம் ஜம்மு கஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் நேற்று தொடங்கியது.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பான ஜி எஸ் டி கவுன்சிலின் இரண்டுநாள் கூட்டம் ஜம்மு கஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் திரு அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்களும். நிதித்துறை செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.  வரும் ஜூலை மாதம்முதல் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமலுக்கு வரவுள்ள நிலையில், பொருட்களுக்கேற்ப பல்வேறு கட்டங்களாக பிரித்து வரிவிதிப்பு குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.  நேற்று நடைபெற்ற முதல்நாள் கூட்டத்தில் ஆயிரத்து 205 பொருட்களுக்கான வரிவிகிதம் இறுதி செய்யப்பட்டது.  பால் பொருட்கள். உணவு தானியங்கள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிப்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  தங்க நகைகள், காலணிகள் உள்ளிட்ட ஆறு பொருட்களுக்கான வரிவிகிதம் இன்று முடிவு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் திரு அருண்  ஜேட்லி தெரிவித்தார்.  சேவைகளுக்கான வரிவிகிதம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

Pin It