ஜி எஸ் டி அமலாக்கத்தைத்  தொடர்ந்து எழுந்த தொழில்நுட்பப் பிரச்சினைகளைக் கண்காணிக்க அமைச்சர்கள்  குழு.

ஜி எஸ் டி அமலாக்கத்தைத்  தொடர்ந்து அதில் ஏற்பட்டுள்ள தகவல்  தொழில்நுட்பப் பிரச்சினைகளைக் கண்காணித்து அதற்குத் தீர்வுகாண அமைச்சர்கள்  குழு ஒன்றை மத்திய நிதியமைச்சர்  திரு. அருண் ஜேட்லி அமைத்துள்ளார். பீகார்  துணை முதலமைச்சர்  திரு. சுசில்குமார்  மோதி தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வருவாய்த்துறை செயலாளர்  திரு. ஹஷ் முக்  ஆதியாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, ஏற்றுமதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை ஹைதராபாதில் நடைபெற்ற 21ஆவது ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தின்  முடிவுகளின் அடிப்படையில்  இந்த இரண்டு குழுக்களும்  அமைக்கப்பட்டுள்ளன.

Pin It