ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன் மற்றும் 3 பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது ஐரோப்பிய ஆணையம் வழக்கு.

ஐரோப்பிய யூனியனின் காற்றுத் தரக்கட்டுப்பாட்டை மீறிய ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன் மற்றும் 3 பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது வழக்கு தொடுப்பதாக ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது. பல ஆண்டுகள் எச்சரிக்கை அளிக்கப்பட்டபின், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில், இத்தாலி, ஹங்கேரி மற்றும் ரொமேனியா உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு, தங்கள் காற்றின் தரத்தை உயர்த்த, ஐரோப்பிய ஆணையம் கடைசி வாய்ப்பளித்தது. இந்த ஆறுநாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, ஆணையத் தலைவர் கர்மேனு வெல்லா அவர்கள் கூறினார். காற்று மாசினால் உண்டாகும் சுகாதார செலவினங்கள் வாயிலாக, ஆண்டொன்றுக்கு 2,470 கோடி டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படுவதாக ஐரோப்பிய யூனியன் கணித்துள்ளது.

Pin It