டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் 63 ஆவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

பாரத ரத்னா டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் 63 ஆவது நினைவு நாளை முன்னிட்டு இன்று அவருக்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சன்ஸத்பவன் புல்வெளியில் உள்ள பாபா சாகேப் சிலைக்குக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மலரஞ்சலி செலுத்துகிறார். இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். மத்திய சமூக நீதி அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் தாவர்சந்த் கெலாட், இந்தத் துறையின் இணையமைச்சர்கள் திரு ராம்தாஸ் அதவாலே, திரு கிருஷன்பால் குர்ஜால். திரு விஜய் சாம்ப்லா ஆகியோரும் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். இது தொடர்பாக அம்பேத்டர் நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மும்பையில் சைத்தியா பூமி என்ற இடத்தில்  மதச்சார்பின்மை பற்றிய ஓவியங்கள் கொண்ட பிறந்த நாள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு மும்பையில் உள்ள சைத்தியாபூமிக்கு நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

Pin It