டிட்லி புயல்  ஒடிஷா  மாநிலம்  கோபால்பூர் அருகே இன்று அதிகாலை கரையைக் கடந்தது.

டிட்லி புயல்  ஒடிஷா  மாநிலம்  கோபால்பூர் அருகே இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இதனால் ஒடிஷாவின் கடலோரப் பகுதிகளில்  கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கோபால்பூர் பகுதியில் ஏராளமான மரங்கள்  சாய்ந்துள்ளன. இப்புயல் மேற்குவங்கக் கரையோரப்  பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் என்று புவனேஷ்வர்  வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தப் புயலால் ஏற்படும் சேதங்களை எதிர்கொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்வது  தொடர்பாக, மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு பி கே சின்ஹா  தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூட்டம் புதுதில்லியில் நேற்று நடைபெற்றது.

ஒடிஷாவில்  பேரிடர் மேலாண்மைக் குழுவின் 14 பிரிவுகளும், ஆந்திரா மற்றும்  மேற்குவங்க  மாநிலங்களில் 3 பிரிவுகளும் பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம்  கூறியுள்ளது.

Pin It